விழுப்புரம் அடுத்துள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை யொட்டி வியாழக்கிழமை காலையில் 8 மணி யளவில் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
முன்னதாக பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடித்து தேர் நிலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கே பூஜைகள் நடைபெற்றது. இதில் திரு.குபேரன் செட்டியார், தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜன், விழுப்புரம் நகர பிரமுகர் திரு.வெங்கடேசன் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி திரு.மணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரின் நான்கு சக்கரங்களுக்கும் பூஜைகள் செய்விக்கப்பட்டு தேரினை பராமரிக்கும் நபர்களுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு சுமார் 8 மணியளவில் தேர் பொதுமக்கள் அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு இழுக்கப்பட்டது.