IPL 2024: சிறப்பாக ஜொலித்த லக்னோ அணி

Published:

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பனிரெண்டாம் நாள் |
ஐபிஎல் 2024 – 02.04.2024 – பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ ஜெயண்ட்ஸ்

          லக்னோ அணியை (181/5, க்விண்டன் டி காக் 81, பூரன் 40, ஸ்டோயினிஸ் 24, ராகுல் 20, கிளன் மேக்ஸ்வெல் 2/23) பெங்களூரு அணி (153, மஹிபால் லோமர் 33, ரஜத் படிதர் 29, விராட் கோலி 22, டியு பிளேசிஸ் 19, மயங்க் யாதவ் 3/14, நவீன் உல் ஹக் 2/25) 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 5.3 ஓவர் வரை ஆடி 20 ரன் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான க்விண்டன் டி காக் (56 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 5 சிக்சர்) 16.4 ஓவர் வரை ஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்து மார்கஸ் ஸ்டோயினிஸ் (24 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன் (ஆட்டமிழக்காமல் 40 ரன்). பூரன் 19ஆவது ஓவரில் 3 சிக்சர்களும் 20ஆவது ஓவரில் 2 சிக்சர்களும் அடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது.  

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

          182 என்ற இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் முதல் மூன்று வீரர்கள் விராட் கோலி (22 ரன்), டியு பிளேசிஸ் (19 ரன்), ரஜத் படிதர் (29 ரன்) ஆகியோர் ஆடியவரை ரன்ரேட் நன்றாக இருந்தது. ஆனால் கோலி, டியு பிளேசிஸ், மேக்ஸ்வெல் மூவரும் முதல் ஆறு ஓவருக்குள் ஆட்டமிழந்துவிட்டனர். அதன் பின்னர் ரன்ரேட் ஏறவே இல்லை.

கடைசில் மஹிபால் லோமர் 13 பந்துகளில் 33 ரன் சேர்த்தார். இருந்தாலும் தொடர்ந்து விக்கட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 153 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இன்றும் மயங்க் யாதவ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கட் எடுத்தார். பெங்களூரு அணியின் சரிவை கோலியின் விக்கட்டை எடுத்து தமிழக வீரரான மணிமாறன் சித்தார்த் தொடங்கிவைத்தார்.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் பெறுகிறார். நாளை விசாகப்பட்டிணத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img