01 Nov26 Dhin cricket 1 - 2026

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டாவிற்கு நிதி திரட்டுவதற்காக பதாகைகளை ஏந்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸ்ரீவில்லிபுதூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சேர்ந்த தமிழ்சுடர் என்ற இளைஞர் மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர். சிட்னியில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா 20 ஓவர் இறுதி கிரிக்கெட் போட்டியின் போது டெல்டாவை பாதுகாப்போம், தமிழக விவசாயிகளை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் ஆகிய வாசகங்கள் எழுதிய பதாகைகளை மைதானத்தில் காட்டி ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending