
தமிழக அரசியல் களம் இன்றைக்கு பரபரப்புடன் இயங்கிவருகிறது. விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்., 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் தொடர்சியாக பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.
நேற்று, அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ரெட்டியார் பட்டி நாராயணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
‘திமுக தொடுத்த வழக்கின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா உயிரிழந்ததற்குக் காரணமே திமுகவும், ஸ்டாலினும்தான் என நான் பகிரங்கமாக கூறுகிறேன்.

ஜெயலலிதாவை வசைபாடிய ப. சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கிவிட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் ஆன்மா ஸ்டாலினையும் சும்மா விடாது; நல்லது செய்தால் நல்லது செய்தால் நடக்கும் கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் !
சட்டசபையில் சட்டையை கிழித்துவிட்டு வரும் ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா ? எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது கூறியுள்ளதாவது :
மண்புழு மண்ணிற்குள் நெளிந்துபோகும்; ஆனால் எடப்பாடி கால்களுக்கும் நெளிந்து போவார் என கிண்டல் செய்துள்ளார்.



Leave a Reply