கல்லூரி மாணவர் தற்கொலை! தந்தையின் பிரிவுதான் காரணமா?

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
thukku1 1 - 2026

தந்தை இறந்த சோகம் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் ஆவார். இவர் மதுரை அண்ணா பல்கலை கழகத்தில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எம் பி ஏ பயின்று வந்துள்ளார்.

கல்லூரி விடுமுறை என்பதால் அனைத்து மாணவர்களும் அவரவர் ஊருக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். இவர் ஊருக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது அவரது தந்தை மோகன் மாரடைப்பால் இறந்து விட்டதாக உறவினர் தெரிவித்துள்ளார்.

தந்தை இறந்ததை தாங்க முடியாமல் மனமுடைந்த மாணவன் மற்ற மாணவர்கள் புறப்பட்டு சென்றவுடன் கத்தியால் கையையும் கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் அதில் பயனில்லாத காரணத்தால் அங்கிருந்த கயிற்றை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.