தனிப்பிரிவு முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

தமிழகம் பொது தகவல்கள்
police 1 - 2026

அறந்தாங்கி அருகே தனிப்பிரிவு முதல் நிலை காவலர் அண்ணாத்துரை(39) மாரடைப்பால் இறந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கரூர் மற்றும் ஏம்பல் காவல் நிலையங்களில் தனிப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் அண்ணாத்துரை( 39) இவர் நாகுடி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமை காலை 4 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதன் பேரில் நாகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் உள்ளது.

இவருக்கு அமுதா (37) என்ற மனைவியும், தாரணிஷ் (10), யஸ்வந்த் (2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.