selvi - 2026

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன். 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி(28), கடந்த 21 ஆம் தேதி அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அப் பகுதியில் மறைந்திருந்த காட்டெருமை அவரை தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிக அளவில் உலா வருகின்றது. இவற்றை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending