தகவல் உரிமைச் சட்டம் ஆதீனம், மடங்களுக்குப் பொருந்தாது!

Published:

madurai highcourt - 2026

ஆதீனம் என்பது பொது நிறுவனம் அல்ல. எனவே தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் வழங்குமாறு ஆதீன மடத்திடம் கோர முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தாக்கல் செய்த மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆதீனம், மடம் என்பது பொது நிறுவனம் அல்ல! அரசின் நிதி உதவியில் இயங்கவில்லை. சொந்த நிதியில் செயல்படுகிறது. தமிழ் பக்தி இலக்கியம், ஆன்மிகப் பணியில் ஈடுபடுகிறது. தமிழக அறநிலையத்துறை சட்டத்தின் சில விதிகள் ஆதீனத்திற்கு பொருந்தும் எனினும், விதிகள்படி ஆதீன நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்ய முடியாது.

ஆதீனம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மத நிறுவனங்கள் பற்றி சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விவரங்கள் கோரி தொந்தரவு செய்கின்றனர்.அந்த சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொது நிறுவனங்களிடம் மட்டுமே விவரங்கள் கோர முடியும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஆதீனம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. மடங்கள், கோவில்கள் பொது நிறுவனங்கள் அல்ல. அரசின் நிதி உதவி பெறாத தன்னாட்சி பெற்ற மத நிறுவனங்களுக்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது என கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் ஆதீனம் அல்லது அதன் மத நிறுவனங்களுக்கு பொருந்தாது என உத்தரவிட வேண்டும் – இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘ஆதீனம், மடம் பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் வழங்குமாறு ஆதீன மடத்திடம் கோர முடியாது. மனு அனுமதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

Related articles

Recent articles

spot_img