நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது இன்டர்போல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, நீரவ் மோடி. வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.  இந்நிலையில், வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி போலி பாஸ்போர்ட் மூலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பயணித்து வந்ததாக கூறப்பட்டது.

இதனால், நீரவ் மோடியை பிடிக்க உதவி செய்யும்படி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

நிரவ் மோடிக்கு டெல்லி, மும்பை, சூரத் போன்ற ஊர்களிலும் வைர நகை விற்பனை நிலையங்கள் உள்ளன

மும்பை திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலர் இவரது வாடிக்கையாளர் என்பதுடன், நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்கள் இவரது நகைக்கடையின் விளம்பர தூதர்களாக காட்சி தந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற பல நாடுகளிலும், குறிப்பாக லண்டன், நியூயார்க், லாஸ் வாகஸ் ஹவாய் தீவுகள், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் நிரவ் மோடிக்கு நகைக்கடைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை நகரத்தின் குர்லா பகுதியில் உள்ள பெரிய பங்களாவில்தான் நிரவ் மோடி வசித்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் நிரவ் மோடி முன்னணி அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.