04 Sep17 arrested - 2026

வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை கழுதையுடன் ஒப்பிட்டுப் பேசிய இரு தீயணைப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் தலைநகர் காரகஸில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் வீரர்கள் சிலருக்கு அதிபரின் மேல் வெறுப்பு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கமாக தீயணைப்பு நிலையத்திற்கு வரும் கழுதை ஒன்றினை அதிபர் நிக்கோலஸ் போல உருவகப்படுத்தி, வரவேற்று பேசினர்.

பின்னர் கழுதை நடந்து செல்லும் போது, லைவ் கமெண்ட்ரி ((Live Commentry)) கொடுத்தனர். தொடர்ந்து தாங்கள் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து அதிபரை அவமானப்படுத்தியதாக, இரு தீயணைப்பு வீரர்களை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending