இன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாத பாகிஸ்தானியர்கள்: ஆய்வில் தகவல்

பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் 15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களில் 69 சதவிகிதம் பேருக்கு இன்டர்நெட் என்றால் என்ன என்று தெரியாமலேயே உள்ளதாக ICT ஆய்வு மையம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 2000 பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.