கருப்பு நிற சீருடை வேண்டாம்: ஆப்கன் பள்ளிச் சிறுமிகள்

இஸ்லாமிய வழக்கப்படி, கருப்பு நிற முழு அங்கியுடன் கூடிய சீருடைகள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர் ஆப்கன் பள்ளிச் சிறுமிகள். ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிக் கூடங்கள், நல்ல கல்வித் தரத்துடன், பல குழந்தைகளுக்கு பிரகாசமான, வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிச் செயல்பட உதவுகின்றன. ஆனால், தமது பள்ளி வாழ்க்கையின் மையமாக இருக்கும் ஒரு விஷயத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் ஆப்கன் சிறுமிகள். அது, தமது பள்ளிச் சீருடையின் நிறத்தைப் பற்றியது. தாங்கள் அணியும் கருப்புச் சீருடைகளை மாற்றுமாறு அவர்கள் கல்வி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.