பசில் ராஜபட்ச உள்பட மூவர் கைது

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபட்ச இன்று பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நிதி மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணைpacil-rajapaksha மேற்கொள்வதற்காக அவர் இன்று பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். பசில் ராஜபட்சவுடன் பொருளாதார வளர்ச்சி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணியாளர் நாயகம்ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடுவலை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு ஏற்ப அவரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து சென்ற பசில் ராஜபட்ச சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தார். பின்னர் நேற்றுதான் நாடு திரும்பினார்.