மனதை திடப்படுத்திக்கோங்க… விருச்சிக ராசியினரே… இன்னும் 2 வருடம்!

விருச்சிக ராசி அன்பர்கள் மிகுந்த பொறுமை காக்க வேண்டும். 26.12.2020 வரை

கோபம் வரும் எரிச்சல் வரும் ஆனாலும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும் கொட்டிவிட்டால் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்.

காரணம் 2ல் சனி பாத சனி காலத்தில் ஜென்மத்தில் வரும் அக்டோபர் முதல் குரு 1வருடங்களுக்கு. ஜென்ம குரு சிறை வாசம் என்பர். குரு நன்மை தராது ( தனிப்பட்ட ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால் பெரிய கெடுதல்கள் தற்போது வராது)

மேலும் பிப்ரவரி 2019 முதல் 8ல் ராகு ஏதாவது குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும்.

இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டு விடுங்கள். அனுமன் ஸ்லோகம் சொல்லுங்கள். சனி காயத்ரியை விடாமல் சொல்லுங்கள்.

சனி மூல மந்திர ஜபம்:

“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”,

– 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி காயத்ரி மந்திரம்:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

– ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன் @ ரவி சாரங்கன்