ajith 60 - 2026

நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது.

இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். முந்தைய படங்களில் இருந்த பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைல் இல்லாமல் முழுதும் கருப்பாக்கி இருக்கிறார்.

படத்தில் அஜித்குமாருக்கு காவல்துறை அதிகாரி வேடம் இதனால் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

thala 60 - 2026

இதுதான் அஜித்குமாரின் வேடமா? என்ற வினாவிற்கு படக்குழுவினரிடம் இருந்து தகவல்கள் இல்லை. இது அஜித் ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியதாகவும், அவருக்கு கால்ஷீட் இல்லை என்பதால் பிரபல இந்தி நடிகையை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

படத்திற்கான “காஸ்டிங்” நடந்து வருவதாகவும், விரைவில் படத்தின் பூஜை நாள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார்

அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending