
ஊரடங்கு விதிகளை மீறியதாக நடிகை பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை
ஊரடங்கு விதிகளை மீறியதாக நடிகை பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில் காரணமின்றி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பைக் காவல்துறையின் ஆய்வாளர் ஹிரேமத் ஒரு பேட்டியில் கூறியதாவது:
பூனம் பாண்டே மற்றும் சாம் அஹமத் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.