
சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் தனது மனைவியுடன் 1990ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்படியே அதே போன்று தற்போது 2020-ல் அதை ரி-கிரியேட் செய்துள்ளார்.
ஊரடங்கால் பல பிரபலங்கள் வீட்டிலேயே தங்களது குடும்பத்தினர் செலவழிக்கும் நேரங்களை புகைப்படம் எடுத்து ரசிகர்களுக்காக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடுகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் தனது மனைவியுடன் 1990ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்படியே அதே போன்று தற்போது 2020-ல் அதை ரி-கிரியேட் செய்துள்ளார்.
90’களில் ரஜினிக்கு இணையான மிக பிஸியான நடிகர்களில் ஒருவராக இருந்த சிரஞ்சீவி, ரஜினியின் மாப்பிள்ளை படத்தில் அவரது நண்பராக தோன்றினார். தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். முப்பது வருடங்களுக்கு முன்பு பிசியாக இருக்கும் நேரத்தில் தனது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ப்ளூ ஷர்ட் மற்றும் மனைவி சிவப்பு புடவை அணிந்து எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம். தற்போது அதே கலர் உடையில் அதே போஸில் மீண்டும் இந்த புகைப்படத்தை ரி-கிரியேட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பல தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் இந்த ஜோடியை வாழ்த்தி உள்ளனர்.