லேசா லேசா படம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. ஏறக்குறைய சிம்பு, தனுஷ், கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக இருந்த பெருமை இவருக்கு உண்டு.
தற்போது ராங்கி,பரமபத ஆட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடத 18 வருடமாக தனது மார்கெட்டை விட்டுவிடாமல் தனக்கென தனி இடத்தை பிடித்து நட்சத்திர வானில் ஜொலித்து வருகிறார்.
சமீபத்தில் உங்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் யார் என ஒரு பேட்டியில் கேட்க, அதற்கு பதிலளித்த திரிஷா ‘எனக்கு எல்லா நடிகர்களும் பிடிக்கும். ஆனாலும் மிகவும் பிடித்தவர் எனில் அது தல அஜித் மட்டுமே’ என பதில் கூறியுள்ளார்.
அஜித்துடன் கிரீடம், மங்காத்தா, ஜீ ஆகிய படங்களில் திரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News