c09c4ed6ae0ebe9a7c06b998cbff4c07 - 2026

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை நண்பர்களுடன் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்படத்தை பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

படத்தை பார்த்து ஸ்தம்பித்து விட்டோம். இது போன்ற ஒரு படத்தை தயாரிப்பது, எடுப்பதும் மிகவும் கடினம்.சுதா மேம் வேற லெவலில் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா சார் சிறப்பான நடிகர் என்றாலும், இப்படத்தில் அவர் அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்’ என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending