சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இப்படத்தில் சிம்பு பாம்பை தனது தோளில் சுற்றிக்கொண்டு கையில் பிடித்து நிற்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், பாம்பை கையில் பிடித்து பையில் சிம்பு போடுவது போல ஒரு வீடியோவும் வெளியானது.இது நிஜ பாம்பை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இதுவே சிம்புவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலஙகு நல ஆர்வலர் ஒருவர் சென்னை வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இதுபற்றி விளக்கமளித்துள்ள இயக்குனர் சுசீந்திரன் ‘சிம்பு கையில் பிடித்திருப்பது உண்மையான பாம்பு அல்ல. படத்தில் நிஜ பாம்பு போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈஸ்வரன் படத்தில் கையில் பாம்பு வைத்திருந்த விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு தேனாம்பேட்டை வனத்துறை அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. எனவே, சிம்பு நேரில் சென்று விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News