லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.
எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். தற்போது தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி விருந்தாக மாஸ்டர் வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.
ஆனாலும், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், தீபாவளியன்று மாஸ்டர் படத்தின் டீசர் வீடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை ஒரு வீடியோ வெளியானது. அதில், தயாராக இருங்கள்.. காத்திருந்தது போதும்… வாத்தி கம்மிங் ஒத்து…மாஸ்டர் அப்டேட் விரைவில்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, விஜய் ரசிகர்கள் 6 மணிக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
எதிர்பார்த்தது போலவே, வருகிற 14ம் தேதி தீபாவளியன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெறித்தனம் தலைவா…காத்திருக்கிறோம்.. இதுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Source: Vellithirai News