குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், சிம்பு துருதுருவென நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் சும்மா தூள் கிளப்பியுள்ளார்.
இந்த டீசர் வீடியோ சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் தீபாவளி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
[embedded content]
Source: Vellithirai News