sri divya

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதன்பின் ஈட்டி, ஜீவா,மாவிரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ திற உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், தொடர் தோல்வி அவரது மார்கெட்டை காலி செய்து விட்டது. கடைசியாக காஷ்மோரா படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் படுதோல்வி என்பதால் அவருக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில், சில வருடங்களுக்கு பின் அவர் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். பானா காத்தாடி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில்தான் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிசியோதெரபி மருத்துவராக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாகவும், அவரை சுற்றியே கதை நகரும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படம் ஒரு அதிரடி ஆக்‌ஷன் கதை எனவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending