harish

நடிகர் ஹரிஸ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்து 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை இளன் என்பவர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பின்னரே ஹரிஸ் கல்யாணுக்கு பல வாய்ப்புகள் வந்தது.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இளன் இயக்க, யுவன் இசையமைக்க, ஹரிஸ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஆனால், ரைசா இப்படத்தில் நடிக்கவில்லை. வேறு கதாநாயகியை தேடும் படலத்தில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஊட்டி ஆகிய பகுதிகளில் நடிக்கவுள்ளது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending