ஓ காதல் கண்மணி படத்தை பாராட்டிய சூர்யா

surya50மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே கௌதம் மேனன் இப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது சூர்யாவும் இவருடன் இணைந்துள்ளார். படம் வெளியான அன்றே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அறிந்த சூர்யா கூடிய சீக்கிரம் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘Just watched #OKKanmani! Mani sir,P.C sir,ARR.. WOW!! Couldn’t take my eyes off the actors! Superb @dulQuer, nithya menon….! #Happy’ என்று கூறியிருக்கிறார்.