புதிதாக தொழில் தொடங்கிய தமன்னா: வாழ்த்து சொன்ன தனுஷ்

dhanush thamannaசினிமாவில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் சினிமாவை தவிர சொந்தமாக நகைகளை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்து விட்டார் தமன்னா.

இதை விற்பனை செய்வதற்காக http://www.witengold.com/ என்ற இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தமன்னாவின் இந்த முயற்சிக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனுஷ் கூறியிருப்பதாவது, தமன்னா என்னுடைய நல்ல தோழி. மனிதநேயம் மிக்கவர். அவருடைய இந்த புதிய தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.