இறுதி கட்ட படப்பிடிப்பு: ஆஜரான விஜய்!

puli20விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் இரண்டு காலங்களில் நடக்கும் கதையை பிரம்மாண்ட பொருட் செலவில் புலி படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சென்னையில் ஆரம்பித்து கேரளா, ஆந்திரா என சுற்றி வந்த விஜய் சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓரிரு நாள் ஓய்வு எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இப்படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இவை அனைத்தும் ஒரு வாரத்தில் எடுத்து முடித்து விடுவார்களாம். அதன்பிறகு பாடல் காட்சிகாக கம்போடியா செல்லவிருக்கிறார்களாம். அங்கு ஹன்சிகாவுடன் ஒரு பாடல் ஸ்ருதியுடன் ஒரு பாடல் என இரண்டு பாடல்கள் படம்பிடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே எடிட்டிங் வேலைகளும் நடந்து வருவதால் படம் ஜுன் அல்லது ஜுலை மாதம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.