dmk nalvar - 2026

தமிழின துரோகிகளே, திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.

‘தீக்குறளை சென்றோதோம்’ என்று திருப்பாவையில் கூறியுள்ளது குறித்தும், அதை காஞ்சி மகா பெரியவர் திருக்குறளை படிக்க வேண்டாம் என சொன்னதாகவும் சில மூடர்களால் பரப்பப்பட்டு வருகிறது. ‘தீக்குறள்’ என்றால் தீய பேச்சு, பொல்லாங்கு, பொய் ,தகாத வார்த்தைகள் என்றே அர்த்தம். திருக்குறள் என்றால், நல்ல பேச்சு, பெருமை வாய்ந்த வார்த்தைகள், அறிவாற்றலான சொற்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

திருப்பாவை 2 :

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!

விளக்கம் :

பூவுலக மாந்தர்களே, பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கான வழிமுறைகளைக் கேட்பீராக !

பாற்கடலில் (பாம்பணையில்) யோக நித்திரை கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடியை வணங்கிப் போற்றுவோம். நோன்பு காலத்தில் நெய்யும், பாலும் உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடி, கண்களுக்கு மை இடாமல், கூந்தலில் மலர் சூடாமல், பிறர்க்கு தீங்கிழைக்கும் ஆகாத செயல்களைச் செய்யாமல், பொய்யுரைக்காமல், கோள் சொல்லாமல், பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு தானம் வழங்கி, நாம் உய்வதற்கான வழியை நாடி, மகிழ்ந்து, இவ்வாறு பாவை நோன்பிருப்போம்!

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

‘வாழமுடியாதவர்கள்’ என்ற தலைப்பில் தந்தையும், மகளும் ஒரே வீட்டில். அவளோ கல்யாணமாகாதவள், அப்பனோ மனைவியை இழந்தவன் .இரவுகள் வந்து போகின்றன ; திருமணம் வரவில்லை. அதனால் தந்தை மகளையே மனைவியாக்கி கொள்கிறான்’ என்று முடியும் கதையின் சொந்தக்காரர்களுக்கு திருக்குறள் குறித்து தெரியாதததில் வியப்பில்லை.அந்த கதையை எழுதிய நோக்கம் என்ன என்று கேட்டதற்கு, தி மு க தலைவர் கருணாநிதி, ‘நாட்டின் வறுமை நிலையை படம் பிடித்து காட்டவே இந்த கதை’ என்று கூறியதை தமிழ் உலகம் மறந்து விடவில்லை.

அதே போல், வேலைக்காரி, குமரிக்கோட்டம் , ரோமாபுரி ராணிகள், கபோதிபுரக்காதல், போன்ற பல்வேறு கேவலமான படைப்புகளை தமிழர்களுக்கு கொடுத்த தீக்குறளுக்கு சொந்தக்காரர்களான வீணர் கூட்டத்திற்கு திருக்குறள் குறித்து பேசும் தகுதி இல்லை. தீக்குறளுக்கும், திருக்குறளுக்கும் வித்தியாசம் தெரியாத நயவஞ்சகர்களுக்கு, ஆபாசத்துக்கும், ஆன்மீகத்துக்கும் வித்தியாசம் தெரியாத உன்மத்தர்களுக்கு, பால்கனிப்பாவை என்று ஒரு பெண் தலைவரை பரிகசித்த பெண்ணினவிரோதிகளுக்கு,கொடுங்கோலர்களுக்கு திருப்பாவை குறித்து தெரியாது போனதில் வியப்பில்லை.

தமிழின துரோகிகளே, திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending