மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில் முன் கூட்டியே வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.
https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை அறியலாம் முடிவுகள் இன்று வெளியானாலும் தரவரிசை பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்.
எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது இந்திய மருத்துவ கவுன்சிலிங் தகவல் தெரிவித்துள்ளது. 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என எம்சிஐ அறிவித்துள்ளது. 2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.