வேலைநிறுத்த ஆசிரியர்கள் 600 பேர் பணியிடை நீக்கம்! அரசு அதிரடி!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்
teachers strike - 2026

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஏற்பாட்டில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆசிரியர்கள். இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவர்ம் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று கைதானவர்கள் மற்றும் இன்று பள்ளிக்கு வராதவர்கள் உள்பட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சுமார் 450 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

இந்தப் பணியிடங்களில், போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பி வந்த ஆசிரியர்கள், போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் நிரப்பப்படுவர்! சென்னையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.