IMG 20191204 WA0009 - 2026

இன்று டிசம்பர் 4 இந்திய கடற்படை தினம் . நம் நாட்டு கடற்படையின் பெருமைகளையும் சாதனைகளையும் கொண்டாடும் நாள்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாட்டத்திற்கு பலமான தீம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது. இன்று துறைமுகத்தில் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தீம் Indian Navy – Silent, Strong, & Swift. இந்திய கடற்படை நம் பெருமைக்குரிய ஆயுதப் படைகளில் ஒன்று.

IMG 20191204 WA0010 - 2026

இந்த நாளை ஒட்டி ஒடிசா பாரதீப் துறைமுகத்தை அடுத்த கடற்பகுதியில் ராணா, காரியல் என்னும் இரண்டு பெரிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. அவற்றை பொதுமக்களும் மாணவர்களும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்
கடற்படை தினத்தில் நாம் நமது கடற்படை வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். அவர்களின் மதிப்புமிக்க சேவையும், தியாகமும் நம் தேசத்தை வலுவாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கி உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending