love - 2026

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விடிஷாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் போபாலில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஷைலேந்திர குஷ்வாஹா என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் தனது காதலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

நட்பாக பழகி பின்னர் காதலராக மாறிய இருவரும் கடந்த ஓராண்டு முழுவதும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்ததாக கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் உறவு வைத்து அனுபவித்ததாகவும், இதனால் தான் கர்ப்பிணியானதாகவும் அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.

lovers 1 - 2026

ஆனால் தற்போது ஷைலேந்திரா தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போது, ஷைலேந்திரா ஏற்கனவே திருமணமாணவர் என்ற செய்தி தெரிய வந்தது. இதனால் அப்பெண்ணும் காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். 2 ஆண்டுகளாக காதலித்து ஒரு ஆண்டு ஒரே வீட்டில் இருந்தும் திருமணம் ஆனவர் என்பது தெரியாதா என இளம் பெண்ணிடம் கேட்டனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
ullasam 1 - 2026

அதற்கு அவை தனக்கு தெரியாது என்றும், என்னை ஏமாற்றி விட்டார் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமாகி, ஏமாற்றியவர் எனத் தெரிந்த பிறகும் அந்த பெண், காதலன் மீது அதிகளவில் ப்ரியம் வைத்திருந்து, தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவர் முன்னிலையிலும் கீழே விழுந்து கதறியழுதார்.

marriage kalyanam - 2026

ஆனாலும், ஏமாற்றிய காதலன், தன்னுடைய மனைவியுடன் தான் வாழப் போவதாகவும், இளம்பெண்ணை காதலியாக மட்டுமே நினைப்பதாகவும் கூறியது போலீசாரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஷைலேந்திரா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending