robbery 2 - 2026

பெங்களூரு மாநகரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெற்றுவருகிறது. இளைஞர்களும், இளம்பெண்களும் போதைக்குள் மூழ்கி இருப்பதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியாக சென்றப்போது மூன்று பெண்களால் ஏற்பட்ட கொடுமை குறித்து இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சித்ரதுர்கா மாவட்டம் சாலக்கெரே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பிராஜ்வால்(21). இவர் நேற்று மதியம் KSRTC மைதானத்திற்கு தனியாக நடந்து சென்றப்போது மூன்று பெண்கள் அங்கு அவரை வழிமறைத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிராஜ்வால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார். அவர்களிடம் இருந்து தப்ப முயற்சித்தப்போதும் அவர்கள் சுற்றி வளைத்தனர்.

பின்னர், பிராஜ்வாலை மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் மறுத்ததால், பணம் தரவில்லையென்றால் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாக கூச்சலிடுவோம் என்று அப்பெண்கள் மிரட்டினர்.

இதனால் வேறு வழியின்றி தான் வைத்திருந்த 4000 ரூபாயை கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து தப்பினார். பின்னர் நேரடியாக காவல்துறை அதிகாரிகளிடம் சென்ற பிராஜ்வால் நடந்ததை கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

இதன் அடிப்படையில் காவல்துறையில் விசாரணை நடத்தி பெண்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending