husband - 2026

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மதிய உணவு குறித்து மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் இவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் கணவர் விரும்பிய உணவை மனைவி சமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற கணவர், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, அதீத கோபத்திற்கு சென்ற கணவர் பால்கனிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending