திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் மாற்றம்! தவறுகளுக்கு இடம் கொடுக்கலையாம்!

Published:

ttd website - 2026
  • திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் சேவைகளின் வெப்சைட்டில் மாற்றம்!
  • வெப்சைட்டில் குற்றங்களுக்கு இடம் தராமல் அமைத்திருப்பதாக அறிக்கை வெளியீடு.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை, தரிசனம், பஸ், கல்யாண மண்டபங்கள் மற்றும் பல ஆன்லைன் சேவைகளோடு கூட இ-டொனேஷன் வசதிகள் போன்றவற்றுக்காக புதிய வெப்சைட் கொண்டு வந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையன்று ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தற்போது இருக்கும் https:/ttdsevaonline.com என்று வெப்சைட்டை https:/tirupatibalaji.ap.gov.in ஆக மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

இது சனிக்கிழமை மே 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின்பெயரில் கணக்கில்லாமல் முளைத்துள்ள போலி வெப்சைட்கள் மூலம் பக்தர்கள் மோசம் போகாமல் இருப்பதற்காக புதியதாக வடிவமைத்த வெப்சைட்டை எடுத்து வருவதாக திதிதே தெரிவித்துள்ளது.

இதுவரையில் பக்தர்களை ஏமாற்றி வந்த 20 வெப்சைட்டுகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிதாக வடிவமைத்து உள்ள tirupatibalaji.ap.gov.in வெப்சைட்டில் திருப்பதி, பாலாஜி, கவர்மெண்ட் என்ற சொற்கள் வடிவமைப்பு குறித்து விவரித்து… வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை பாலாஜி என்று அழைப்பார்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திருப்பதி யாத்திரை என்று அழைப்பார்கள். இந்த இரண்டு சொற்களைக் கொண்டு சர்ச் செய்வதால் போலி வெப்சைட்களின் வலையில் விழுகிறார்கள். புதிய வெப்சைட்டில் இந்த இரண்டு சொற்களையுமே சேர்த்து உள்ளதால் அதிகாரபூர்வமான சைட் ஓப்பன் ஆகிறது.

வெறுமனே டொமைனில் தவிர அப்ளிகேஷனில் மாற்றங்களை செய்ய வில்லை. ap.gov.in என்பது மாநில அரசாங்க வெப்சைட்டின் எல்லைக்குள்ளேயே வருகிறது. ap.gov.in என்ற பெயரோடு போலி வெப்சைட்கள் எடுத்து வருவது அத்தனை எளிதல்ல என்று தெரிவித்தது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img