vankodumai

ஆந்திராவில் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவின் கசிம்கோட்டா மண்டலத்தில் உள்ள நரசுபுரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் புகார் செய்ததையடுத்து, அப்பெண் அனகாபள்ளி திஷா காவல் நிலையத்தில் மே 23-ஆம் தேதியன்று புகார் செய்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டுள்ள அறுபது வயது எருக்கா நாயுடுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவல்களை அனகாபள்ளி திஷா காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் குமார் சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending