போர்வெல்: தவறி விழுந்த 3 வயது சிறுவன்! 12 மணி நேர போராட்டத்தில் உடல் மீட்பு!

இந்தியா பொது தகவல்கள்
telungana

போட்ச்சனல்லி கிராமத்தில் சஞ்சய் சாய்வரதன் என்னும் 3 வயது சிறுவன் விவசாய நிலத்தில் தோண்டப்பட்டு மூடாமல் இருந்த 120 அடி போர்வெல்லில் தவறி உள்ளே விழுந்தான். சிறுவன் உள்ளே விழுந்ததை அறிந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் கொடுத்தனர்.

சிறுவன் விழுந்த இடத்தில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்கள் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு இன்று காலை சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான். இறந்த நிலையில் கிடந்த தங்கள் மகனை கண்டு தாய் தந்தை கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் சுதீப் எனும் சிறுவன் இதேபோன்று போர்வெல்லில் சிக்கிக்கொண்டு மரணமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.