புதுதில்லி: புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டத்தை நடத்திய சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது, அது தங்களின் குடும்ப விவகாரம் என்றும், அதனை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கு பெறும் மாநாடு, புனித வெள்ளியான ஏப். 3-ஆம் தேதி அன்று தில்லியில் தொடங்கி நடந்தது. அப்போது, நீதிபதிகளுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் புனித வெள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியாது என கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்தார். குரியனின் இந்தக் கடிதமும் அவர் காரணமும் பலத்த சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த போது, ‘ ஜோசப் குரியன் பிரச்னை எதிர்பார்க்காதது, துரதிர்ஷ்டவசமானது. நான்தான் குடும்பத்தின் தலைவர். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றினால், அதை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நடந்தது, ஒரு கருத்தரங்கு அல்ல, மாறாக நீதிபதிகளுக்குள்ளே நடக்கும் முக்கியமான கூட்டம். நீதித்துறைக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன்வைத்து நடத்தும் கூட்டம்… என்று கூறினார்.
‘புனித வெள்ளியில் கூட்டம்’ சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது: தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari