pinarayvijayan e1565532055750

கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும், தவறுதலாக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தெலங்கானாவுக்கு பதிலாக கேரளம் வரும் ரயிலில் வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கேரளத்தில் 526 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending