இந்திய கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கான கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகள் ஸிவாவை வயிற்றுப் பகுதியில் கட்டிச் சுமந்து பொறுப்பான அப்பாவாக தன் சொந்த ஊர் ராஞ்சிக்கு வந்தார். விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். எம்.எஸ். தோனி 2010 ஜூலை 4ஆம் தேதி தனது தோழி சாக்ஷியை மணந்தார். இந்தத் தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஸிவா என்று பெயர் வைத்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுற்றுப் பயணத்தில் இருந்த தோனி தனது மகளைப் பார்க்க இயலாத சூழல் இருந்தது. இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார் தோனி. அவர் இன்று தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்தார். தனது குழந்தையை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றதை அங்கிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பிப்.6ம் தேதி ஸிவா பிறந்தபோது, தோனி ஆஸ்திரேலியாவில் இருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை, வெளிப்படையாக எல்லோர் முன்பும் முதல் முறையாக தன் குழந்தை ஸிவாவை காட்டியுள்ளார் தோனி. முன்னர், ஸிவா பிறந்த சில நாட்களில் தோனி ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருப்பதாக ஒரு விடியோ இணையதளங்களில் உலவியது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார் தோனியின் மனைவி சாக்ஷி.
குழந்தை ஸிவாவை கட்டிச் சுமந்து விமான நிலையம் வந்த தோனி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari