ஹைதராபாத் – சம்ஷாபாத் விமான நிலையத்துக்கு சர்வதேச விருது!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
hyderabad airport
hyderabad airport

ஹைதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்னேஷனல் ஏர்போர்ட் (ஆர்ஜிஐஏ) மற்றுமொரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு இதமான செயல்முறைகளை எடுத்து வருவதன் ஒரு பகுதியாக, ஆசியா பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் 15 லிருந்து 35 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் தகுதி கொண்ட விமான நிலையங்களில் ஆர்ஜிஐஏ 2020 ஆம் ஆண்டுக்கான பசிபிக் க்ரீன் ஏர்போர்ட் பிளாட்டினம் விருதினை பெற்றுள்ளது.

இந்த விருதினை ஆர்ஜிஐஏ க்கு சர்வதேச விமான நிலையம் அண்மையில் அறிவித்தது. ஆர்ஜிஐஏ எடுத்து வரும் சுற்றுச்சூழலுக்கு அனுகூலமான செயல்முறைகள் மிகவும் நல்ல விதமாக உள்ளன என்று ஏசிஐ டைரக்டர் ஸ்டெபானோ பாரோன்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவரங்களை ஏர்போர்ட் சிஇஓ எஸ்ஜிகே கிஷோர் வெள்ளிக்கிழமை அன்று ஓர் அறிவிப்பில் தெரிவித்தார்.

சம்ஷாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் விநியோகத்தின் அளவை குறைத்து தண்ணீரை ரீசைக்கிளிங் மூலம் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டுவதற்கு பிரத்யேக செயல்முறை திட்டங்களை வகுத்துள்ளார்கள்.

இதற்காக விமான நிலையத்தில் 925 கேஎல்டி தகுதி கொண்ட ட்ரீட்மெண்ட் பிராண்டுகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆட்டோமேட்டிக் ட்ரிப் சிஸ்டம் மூலம் 6 லட்சம் கியூபிக் மீட்டர் நீரை சேமித்து வைக்கும் ரிசர்வாயர் களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த நீர் வடிவமைப்பினை ஏசிஐ தலைமையில் கிரீன் ஏர்போர்ட் கமிட்டி அடையாளம் கண்டது பாராட்டத்தக்கது என்று ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.