who mike ryon - 2026

இந்தியாவில் கொரோனா இன்னும் தீவிரமடையவில்லை என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, ஆனால் அதற்கான அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநர் மைக்கேல் ரையான் பேசும்போது… இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் 3 வாரங்களில் இரண்டு மடங்கு ஆகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் நோய்த்தொற்று பாதிப்பு வேறுபட்ட அளவில் உள்ளது என்று கூறியுள்ள அவர், நகரப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் அதிக அளவில் கிராமப் பகுதிகளுக்குச் செல்வதால், அவர்கள் மூலம் நோய்த்தொற்று கிராமப் பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது என்று குறிப்பிட்ட அவர், தற்போது தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளதால் பரவல் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending