பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்பு

mayilsamy-annaduraiபெங்களூரு: பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக தமிழகத்தின் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாகவும், ஐ.ஆர்.எஸ். மற்றும் எஸ்.எஸ்.எஸ். செயற்கைக்கோள் திட்ட இயக்குனராகவும் இருப்பவர் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் தற்போது, இஸ்ரோவில் உள்ள செயற்கைக்கோள் மைய (ஐசாக்) இயக்குனராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.