suresh-rainaஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா விரைவில் தனது தோழியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மென் சுரேஷ் ரெய்னா. இவர் ஒரு நாள், டி20, ஐ.பி.எல் போட்டிகள் என அனைத்திலும் பேட்டிங்கில் ஜொலிப்பவர். சிக்ஸர்கள் அடித்துக் கலக்குபவர். தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக அடித்து, இந்திய அணியை பல நேரங்களில் வெற்றியடையச் செய்வதவர். இவரும் தோனியும் களத்தில் 5 வது விக்கெட்டுக்கு நின்று விட்டால், நிச்சயம் 80ன் ரன்களாவது ஜோடி சேர்ந்து எடுத்து விடுவார்கள் என்று சொல்லும் வகையில் நடு வரிசையில் நிலைத்து நின்று ஆடக் கூடியவர். அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியிலும் சதமடித்து அசத்தினார். கிரிக்கெட் மைதானத்தில் கலக்கும் சுரேஷ் ரெய்னா வாழ்க்கையில் கலக்கக் காத்திருக்கிறார். சுரெஷ் ரெய்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மணமகள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா சவுத்திரி என்பவர். இவர் சுரேஷின் தோழி. பிரியங்கா சவுத்திரியின் தாயாரும், ரெய்னாவின் தாயாரும் மிக நெருக்கமான உயிர்த் தோழிகள். அந்த வகையில், தன் தோழியின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர் திட்டமிட்டு, ரெய்னாவின் சம்மதத்தையும் பெற்றுவிட்டாராம். இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண விழாவில் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending