sakthi kanth 1 - 2026

கொரோனா தொற்றானது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ பேங்கிங் மற்றும் பொருளாதார மாநாட்டில் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளது.

கொரோனா தொற்றானது, நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக, கடந்த பிப்., முதல் ரெபோ வட்டி விகிதங்களை 135 புள்ளிகளை குறைத்துள்ளோம். வளர்ச்சி குறைவை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending