corono

ஒரு திருமணத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயது பெண் ஒருவர் அண்மையில் thiல்லியில் திருமணத்திற்கு சென்று வந்தார். பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூலை 4ம் தேதி இறந்தார். அவரின் 5 மகன்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா ஏற்பட ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்

கொரோனாவிற்கு 88 வயது பெண் மற்றும் அவருடைய ஐந்து மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த கிராமமே பீதியில் ஆழ்ந்துள்ளது.

இதையடுத்து, ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை களம் இறங்கி உள்ளது. அந்த கிராமமே ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வீடு தோறும் கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending