உயிரைக் காப்பாற்றிய ஊழியருக்கு பைக் பரிசு! ஜாவா பைக் நிறுவனம்!

இந்தியா சற்றுமுன்
railway worker saved a child
railway worker saved a child

மகாராஷ்டிரா மாநிலம் வாங்கனி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே தாயுடன் சென்றுகொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் விழுந்தது.

அப்போது பார்த்து ரயில் வந்து கொண்டிருந்ததால், அந்த பெண் ஓடி சென்று குழந்தையை தூக்குவதற்கு பதிலாக சற்று தள்ளி நின்று, வா. வா. என கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே, எதிரே வரும் ரயிலை பொருட்படுத்தாது, தண்டவாளத்தின் வழியே ஓடோடி வந்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதன்பின்னரே அந்த குழந்தையின் தாயார் பார்வையற்றவர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை நொடியும் தாமதிக்காமல் துணிந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு ரயில்வே நிர்வாகம் நேற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கிய நிலையில், அந்த ரியல் ஹீரோவுக்கு புதிய பைக் ஒன்றை பரிசளிக்க இருப்பதாக ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.