fake money 1
fake money 1

கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காவல் துறையினர் அசேஷம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அசேஷம் பகுதியில் இருக்கும் ஒரு விடுதியில் அறை எடுத்து காரின் உரிமையாளர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த விடுதிக்கு சென்று கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மகாராஜபுரம் பகுதியில் வசிக்கும் மாதவன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் மாதவனை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த 1 லட்சத்து 90 ஆயிரத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் கார் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கள்ளநோட்டு மாதவனுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending