ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை

ரத்து செய்யப்பட்டதால் திட்டமிட்டபயணங்களை மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

தொடர் இயந்திர கோளாறு காரணமாக ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை. விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் இயந்திரக் கோளாறு ஏற்படுவதன் எதிரொலியாக ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி இயந்திரக் கோளாறு ஏற்படுகிறது என்று கூறப்படுவதன் எதிரொலியாக ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்கள் இந்திய வானில் பறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையரகம் தடைவிதித்துள்ளது.

இதனால் இண்டிகோ நிறுவனம் பயன்படுத்திய 8 ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களும், விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.

இதேபோல கோஏர் நிறுவனத்தில் 3 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கான 65 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்படி விமான சேவைகள் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் திட்டமிட்டபயணங்களை மேற்கொள்ள முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.