IMG 20180325 WA0027 - 2026

ஓசில டீ குடிச்சு பழகினவனுக்கு திடீர்ன்னு விலைய கேட்டா தலை சுத்தத்தான் செய்யும்…

சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி டேயில் டீ கேட்டேன். டீ விலை ரூ.135, காபி விலை ரூ.180 என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் விலையை கேட்டு டீயை மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா அல்லது தவறா? என கேட்டுள்ளார்.

சிதம்பரத்தின் இந்த ட்வீட்டை படித்தவர்கள் இத்தனை நாள் இவர் காபி டீயெல்லாம் எங்கேயும் காசு கொடுத்து வாங்கிக் குடித்ததில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், விலைவாசி உயர்வுக்கு பல்வேறு வரிகளை விதித்து ஒரு காரணமாக இருந்தவர், ஒரு டீ வாங்கிக் குடிக்கக் கூட மனமில்லாமல் கஞ்சத்தனம் கொண்டிருக்கிறார் என்றும் , இப்படித்தானே பொதுமக்கள் விலைவாசி உயர்வு குறித்து கதறிக் கொண்டிருந்தார்கள் என்றும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending